Sunday, December 5, 2010

நாட்டு நடப்பு! 1

இன்னும் கொஞ்சம் நாட்டு நடப்பு!
இப்போது சென்னையில் மட்டுமல்லாது தமிழகத்தின் எல்லா இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த சமயத்தில் அனைவருமே முடிந்த அளவு மழை நீரை சேமித்து வைத்தால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும். நிலத்தடி நீரின் உப்புத் தன்மை குறையும். எதுவுமே அரசாங்கம் செய்ய வேண்டும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்காமல் நம்மால் செய்ய முடிந்ததை செய்வது நல்லது.
நெல்லை மாவட்டத்தில் எங்கள் ஊரில் உள்ள வீட்டில் மழை நீர் சேமிப்பை செய்து உள்ளோம். மழை நீர் கிணற்றில் சென்று சேருமாறு அமைத்து உள்ளோம்.

Monday, November 29, 2010

நாட்டு நடப்பு!

பல்வேறு தளங்களையும், இனியப் பூக்களையும் வாசித்து வருகிறோம். தற்போது இந்தியாவில் பீகார் மாநில சட்ட சபைத் தேர்தல் முடிந்து மக்கள் தேசத்தின் வளர்ச்சிக்கான நம்பிக்கையான வாக்குகளை வெளிப் படுத்தியுள்ளார்கள். குஜராத் மாநில மக்களின் வளர்ச்சியும் நம்பிக்கையும் இந்தியா முழுதும் பரவி வருகிறது. உண்மையாகவே தேசம் தன் வளர்ச்சியை சரியான நேரத்தில் உலகுக்கு வெளிப் படுத்தும்.
நம்பிக்கையுடன் ஒன்று படுவோம். உழைப்போம். உழைப்பாளர்களை பெருமைப் படுத்துவோம்.
வாழ்க பாரத சமுதாயம்! வெல்க சனாதன தர்மம்!

Wednesday, May 5, 2010

பொது

இணையம் வழியாக பல செய்திகளை தெரிந்து கொண்டாலும் பல செய்திகள் இன்னும் பலரைச் சென்று சரியாக சேரவில்லை! அவரவர்கள் தனக்குப் பிடித்த செய்திகளை மட்டும் படிக்கவும் விவாதிக்கவும் செய்கிறோம்! ஆனால் எல்லோருக்கும் பயன் படும் செய்திகள் சரியாக உதவவில்லை!
புவி வெப்பம் அடைதலைப் பற்றி தெரிந்து கொண்டாலும் செடிகள் வைத்து முயற்சிகளை செய்யாமலே பல பேர் இருக்கிறோம்!
நாங்கள் வில்வச்செடி வைத்து வளர்த்து வருகிறோம்! அரசு மட்டுமே செய்ய வேண்டும் என சொல்லிக் கொண்டிருக்காமல் நாமும் செடிகள் வைத்து
பராமரிக்க ஆரம்பித்தால் தான் நல்லது!